பள்ளி கல்வி, தொழில், இந்து அறநிலையத் துறை போன்றவற்றுக்கு பல்லாயிரம் கோடி கொடுக்கப்படும் நிலையில், இந்த நிதியாண்டில் தமது தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 119 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இதுவே கர்நாடகாவில் ஐ.டி. துறைக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், நிதியமைச்சராக இருந்த போது பி.டி.ஆரிடம் நிதி கேட்க தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்போம் என்பது இப்போது தெரிகிறதா என வினவினார்.
அதற்கு, யார் நிதியமைச்சரக இருந்தாலும் நீர்வளத்துறைக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் பி.டி.ஆர். கூறினார்.