​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் இயந்திரக் கோளாறால் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் தாமதம்... நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

Published : Jun 29, 2024 6:41 AM

சென்னை விமான நிலையத்தில் இயந்திரக் கோளாறால் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் தாமதம்... நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

Jun 29, 2024 6:41 AM

சென்னை விமான நிலைய உள்பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. விமான நிலையத்தில் உள்ளிருந்து வெளியே வருவதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் கூறினர்.

விமான நிலையத்திற்குள் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான வருகை பதிவு செய்து அதற்கான கட்டணம் வசூலிப்பதில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.