​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லெவல் கிராசிங்'கில் நிற்காமல் சென்ற பேருந்து மீது மோதிய ரயில்... பேருந்தில் சென்ற 9 பயணிகளில் 6 பேர் உயிரிழப்பு

Published : Jun 28, 2024 7:34 AM

லெவல் கிராசிங்'கில் நிற்காமல் சென்ற பேருந்து மீது மோதிய ரயில்... பேருந்தில் சென்ற 9 பயணிகளில் 6 பேர் உயிரிழப்பு

Jun 28, 2024 7:34 AM

ஸ்லோவேக்கியாவில், பேருந்து மீது ரயில் மோதியதில் பேருந்து பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். செக் குடியரசில் இருந்து ஹங்கேரி நாட்டிற்கு சென்ற சர்வதேச ரயில், ஸ்லோவேக்கியாவின் நொவே ஜாம்கி என்ற பகுதியில் லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற பேருந்து மீது அதிவேகமாக மோதியது.

இதில் 2 பாகங்களாக பேருந்து உடைந்து, அதில் சென்ற 9 பயணிகளில் 6 பேரின் உயிரை காவு வாங்கியது. தீப்பற்றி எரியத் தொடங்கிய ரயிலில் இருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு பயணிகள் வெளியேறினர்.

அண்மையில் வீசிய புயலால், லெவல் கிராசிங்கில் இருந்த சிக்னல் லைட்கள் பழுதாகி எரியாமல் போனதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.