டாஸ்மாக் கடைகளில் 20 சதவீதம் அளவிற்கு மது விற்பனை சரிந்துள்ளதற்கு காரணம் என்ன? என்று சேலம் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களிடம் முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா கேள்வி எழுப்பினார்.
சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் கெஜல் நாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை சரிவுக்கான காரணம் குறித்து கேட்டார்.
கள்ளச்சாரய விற்பனை நடைபெற்றால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும், தெரிந்தும் தெரியாமலும் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நர்மதா எச்சரித்தார்.