கைரேகை பதிவாகாமல் உள்ள சில நபர்களுக்கு எவ்வாறு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் முதற்கட்டமாக 9000 ரேசன் கடைகளில் கண் கருவிழி ஐரிஸ் பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
3 மாதங்களுக்குள் மற்ற ரேஷன் கடைகளிலும் கண் கருவிழியை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.