​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரெட்டியார்களை இழிவுபடுத்தினேனா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

Published : Jun 27, 2024 6:45 PM

ரெட்டியார்களை இழிவுபடுத்தினேனா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

Jun 27, 2024 6:45 PM

சட்டப்பேரவையில் ரெட்டியார் சமூகம் குறித்து தாம் இழிவாக ஏதும் பேசவில்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.

நேற்று முன்தினம் பேரவையில் ரெட்டியார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்குமாறு அமைச்சர் நேரு கோரிக்கை விடுத்த நிலையில், அச்சமூகத்தின் பொருளாதார நிலையை குறிப்பிட்டு ராஜகண்ணப்பன் பதிலளித்தார்.

அது தொடர்பாக இன்று தன்னிலை விளக்கம் அளித்த ராஜகண்ணப்பன், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது ஏற்புடையதல்ல என்பதை குறிப்பிட, பொருளாதாரத்தில் மேம்பட்ட ரெட்டியார் சமூகத்தை உதாரணம் காட்டியதாக கூறினார்.