கடலூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான அருவாமுக்கு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது..
கடலூர் அருகே திருச்சோபுரத்தில் கீழ்பரவானற்றில், அருவாமூக்கு வடிவில் இணையும் இடத்தில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து ஒரு புதிய கால்வாய் வெட்டி கடலில் கலந்து, எளிதில் வெள்ள நீரை வடிய வைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு 81 கோடியை 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
6 மாதத்தில் திட்டப்பணி நிறைவடையும் பட்சத்தில் மழைக்காலங்களில் வெள்ளம் எளிதில் வடிய வைக்கப்படுவதோடு, சுமார் 15 ஆயிரத்து 600 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.