ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய குற்றவியல் சட்டங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாகவும், உடனடியாகவும் நியாயமான தீர்ப்புகளை வழங்கும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வி.ஐ.டி. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மேக்வால், இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க இது போன்ற புதிய சட்டங்கள் அவசியம் தேவை எனக்கூறினார்.