​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷச்சாராய உயிரிழப்பு.. கார்கே, ராகுல் வாய்திறக்காதது ஏன்..? நிர்மலா சீதாராமன் கேள்வி

Published : Jun 23, 2024 6:47 PM

விஷச்சாராய உயிரிழப்பு.. கார்கே, ராகுல் வாய்திறக்காதது ஏன்..? நிர்மலா சீதாராமன் கேள்வி

Jun 23, 2024 6:47 PM

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய அவர், விஷச்சாராயம் குடித்த 56 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறினார்.

தமிழக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வரும் நிலையிலும் கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

பட்டியலினத்தோர் அதிகம் பேர் பலியான இந்த சம்பவம் பற்றி வாய்திறக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி எங்கே போனார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.