​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் மகனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி..

Published : Jun 23, 2024 5:13 PM

மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் மகனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி..

Jun 23, 2024 5:13 PM

சேலம் மாவட்டம் வரகூரில், மதுபோதையில் தொடர்ந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவி அடித்துக் கொலை செய்தார்.

மின்வாரிய ஊழியரான ஆதிமூலம், மதுபோதையில் இருக்கும் போது காரணமே இல்லாமல் மனைவி வளர்மதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஞாயிறன்றும் ஆதிமூலம் தன்னிடம் தகராறில் ஈடுபட்ட போது, தனது மகன் கலைச்செல்வனுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் வளர்மதி தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து ஆதிமூலம் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.