கள்ளக்குறிச்சியில் விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் மெத்தனாலை கடத்த பல யுக்திகளை கையாண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
பண்ருட்டியைச் சேர்ந்த ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளரான சக்திவேலிடம், லெதர் பிசினஸ் செய்து வருவதாகவும், ஜிஎஸ்டி பில் இல்லாததால் தின்னர் வாங்க கஷ்டமாக இருப்பதாகவும் கூறி ஜி.எஸ்.டி பில் மட்டும் தந்தால் அதற்கேற்ப கமிஷன் தருவதாகக் கூறி மாதேஷ் மெத்தனாலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
வரும்வழியில் போலீசார் வழிமறித்ததால், பேக்கரிக்கு தேவையான ஆயில் மற்றும் பொருட்கள் எனக் கூறி ஜிஎஸ்டி பில்லை காண்பித்து தப்பித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்படி கடத்தி வரும் மெத்தனாலை நண்பரும், மீனவரான கண்ணனிடம் கொடுத்து சின்னதுரை உள்ளிட்ட சாராய வியாபாரிகளுக்கு பிரித்து கொடுத்தும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கண்ணனிடமிருந்து 5 பேரல் மெத்தனாலை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார் அவரது உறவினர் ஒருவரிடம் 7 பேரல் மெத்தனாலை கொடுத்து வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.