​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் கணவர் உயிரிழந்த விடுவார் என மருத்துவர் தெரிவித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி..

Published : Jun 23, 2024 7:41 AM

தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் கணவர் உயிரிழந்த விடுவார் என மருத்துவர் தெரிவித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி..

Jun 23, 2024 7:41 AM

சேலத்தில் தற்கொலைக்கு முயன்ற கணவர் உயிர் பிழைக்க மாட்டார் எனக் கூறியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

துட்டம்பட்டி பூவனூரைச் சேர்ந்த பூபாலன் - மேகலா தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகும் நிலையில், குடும்பத் தகராறு காரணமாக பூபாலன் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிடவே, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பூபாலனை பரிசோதித்த மருத்துவர் அவர் பிழைப்பது கடினம் என மேகலாவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மேகலா, மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள மரம் ஒன்றில் துப்பாட்டாவைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பூபாலன் பிழைத்துக் கொண்டதாகக் கூறப்படும் நிலையில், மருத்துவர் அவசரப்பட்டுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.