திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான டிக்கெட்டுகளின் விலையில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ள தேவஸ்தான நிர்வாகம், டிக்கெட்டுகளைப் பெற இடைத்தரகர்களை நம்பாமல், தேவஸ்தான இணையதளம் அல்லது அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழத்தின் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.