விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இரண்டு முறை சந்தித்து மனு கொடுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
முதற்கட்ட பணிக்கு புதிய ஒப்பந்ததாரரை கண்டறிய வேண்டியுள்ளதாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.