ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகக் கட்டடத்தை ஆந்திர மாநில தலைநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், பொக்லைன் மற்றும் புல்டோசர் இயந்திரங்களுடன் இடித்தனர்.
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டப்படுவதாகக் கூறி அதை இடிக்க ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இடிக்கும் நடவடிக்கைக்குத் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவை மீறி கட்டடம் இடிக்கப்பட்டதாகவும், இது ஆளும் தெலுங்கு தேச அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸார் தெரிவித்தனர்.