திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பச்சைமலை அருகே உள்ள நெசக்குளம் மலை கிராமத்தில் இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை தரையில் ஊற்றி அழித்தனர்.
இனி வரும் காலங்களில், தங்கள் கிராமங்களில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்க அனுமதிக்க மாட்டோம் என, ஆட்சியர், எஸ்.பி முன்னிலையில், கிராம மக்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.