கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் திமுக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுவதாகவும் , இதற்கு பொறுப்பேற்று அந்த துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
கோவை விமானநிலையத்தில் பேசிய அவர், கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் யாராலும் ஏற்று கொள்ள முடியாதது என்று தெரிவித்தார்.
நிகழ்விடத்திற்க்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஏன் பார்க்க வில்லை என்று கேள்வி எழுப்பிய எல்.முருகன், அவர்களை சந்திக்க முடியாமல் முதல்வர் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.