விசாகப்பட்டினத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் வரிப்பணம் 500 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டியிருப்பதாக ஆளும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. பங்களாவின் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அக்கட்சி, குளியலறை தொட்டி மட்டும் 26 லட்ச ரூபாய் மதிப்புள்ளதாக கூறியுள்ளது.
சொகுசு பங்களாவை தனது முகாம் அலுவலமாக பயன்படுத்த ஜெகன் மோகன் திட்டமிட்டிருந்ததாக குற்றம்சாட்டிய தெலுங்கு தேச கட்சி, அது அரசு கட்டிடம் என்றால் இவ்வளவு நாள் அறிவிக்காதது ஏன்? பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகள் வந்தால் தங்குவதற்கான கட்டிடம் அது பதிலளித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, அரசு கட்டிடத்தை ஜெகன் மோகனுடையது எனக் காட்ட தெலுங்கு தேசக் கட்சி முயற்சிப்பதாக கூறியுள்ளது. இதற்கிடையே, முள் கம்பி வேலிகள் போட்டு தடுக்கப்பட்டிருந்த சொகுசு பங்களாவை ஆந்திர அரசு மக்கள் பார்வைக்கு திறந்து விட்டுள்ளது.