சென்னை கொரட்டூர் பகுதியில் இடம் வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் பெண் தலைமைக் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2021ஆம் ஆண்டில் இடம் வாங்கித் தருவதாக கூறி, 3 ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பித் தராதது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக மாலதி என்பவர் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக 3 பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார், திருவொற்றியூர் காவல் நிலைய காவலர் தேவி மற்றும் அவரது கணவர் ரகு ஆகியோரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.