உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் அஸாஃப் நகரில் உள்ள எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்த நெருப்பை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடிவருகின்றனர்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் விதமாக அந்நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள், முக்கிய சாலைகள் போன்றவற்றை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்திவருகிறது.