தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் சேதமடைந்த முக்காணி ஆற்றுப் பாலத்தை தற்போது வரை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின்மீது உள்ள பழைய பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, அதன் அருகே 2015ஆம் ஆண்டு 56 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட புதிய பாலம் கட்டப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு பெய்த மழையால் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 6 மாதங்களாக பழைய பாலத்திலேயே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.