கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் விநியோகம் செய்யும் குடிநீரில் எலும்பு மற்றும் இறைச்சி கழிவுகள் வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
21வது வார்டு பகுதியான கெண்டையூர், சாமப்பா லேஅவுட் குடியிருப்பில் ஒரு வாரமாக குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக அதிகாரிகளிடம் பொது மக்கள் முறையிட்டனர்.
இந்நிலையில் தொட்டியில் இருந்து தண்ணீர் வரக்கூடிய குழாயை துண்டித்து நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தபோது இறைச்சி கழிவு மற்றும் எலும்புகள் வெளியேறியது.
இதனால் தொட்டியில் பறவை விழுந்து இறந்ததா என்று அவர்கள் ஆய்வு செய்தனர்.