கோவில்பட்டியில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த கயத்தார், வில்லிசேரி பகுதியைச் சேர்ந்த பயணிகளை அந்த ஊர்களுக்குள் பேருந்து செல்லாது என்று கூறி இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டனர்.
நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீஸார் வந்து பயணிகளை வேறு அரசு மூலம் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.