மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு ஆண்டுக்கான மறைமுக ஏலத்தில், சராசரியாக ஒரு குவிண்டால் பருத்தி ஆறாயிரத்து 600 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
மின்தட்டுப்பாடு, பருவம் தவறி பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் 12 ஆயிரம் ரூபாய் வரை விலை போன நிலையில் இந்த ஆண்டு விலை குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.