அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், இசை நிகழ்ச்சியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்காக கொண்டாடப்படும் ஜூன்டீன்த் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், அந்த வாக்குவாதத்திற்கு துளியும் தொடர்பில்லாத 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 4 லட்ச ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.