ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ சியாங்கிற்கு அரசு முறை வரவேற்பு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் நாடாளுமன்றம் வெளியே திரண்டனர்.
திபேத்தியர்கள் மற்றும் உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சீன அரசாங்கத்தால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
ஆஸ்திரேலிய அரசுடன் அண்மையில் ஏற்பட்ட முரணால், ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிகளை சீனா தடுத்து நிறுத்தியது. இதனால் இருதரப்பு உறவுகளிடையே பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சீனப் பிரதமர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.