​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறைகளில் உதிரி பாகங்கள் திருட்டு...

Published : Jun 17, 2024 12:55 PM

செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறைகளில் உதிரி பாகங்கள் திருட்டு...

Jun 17, 2024 12:55 PM

திருப்பத்தூர் அருகே கோனேரி குப்பம், உடையமுத்தூர், பொம்மிகுப்பம், தண்ணீர்பந்தல், மாடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் டவர்களில் இருந்த பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெங்களாபுரம் பகுதியில் வாகன சோதனை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் சந்தேகப்பட்டு சந்திரசேகரன் என்ற நபரை விசாரித்ததாகவும், அதில் அவர் தான் செல்ஃபோன் டவர் உதிரி பாகங்களை திருடி விற்றவர் என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து திருட்டுப் பொருளை வாங்கியதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.