ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விதிமுறைகளை மீறி அரசுப் பணம் 500 கோடி ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்ட அரண்மனையை கட்டியுள்ளதாக தெலுங்கு தேச எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான கண்ட்டா சீனிவாச ராவ் தெரிவித்தார்.
சுற்றுலா மூலம் ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய பசுமை விடுதிகளை இடித்துவிட்டு, 61 ஏக்கரில் இந்த அரண்மனையை ஜெகன்மோகன் ரெட்டி கட்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரண்மனை குறித்து நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை ஜெகன்மோகன் அரசு தெரிவித்ததாகவும், கட்டுமானப் பணியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கி மிகவும் ரகசியமாக அந்த அரண்மனை கட்டப்பட்டதாகவும் சீனிவாச ராவ் தெரிவித்தார்.