ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மசூர் பருப்பு வழங்கலாம் என்கிற போது, எதன் அடிப்படையில் அதிக விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பை வழங்கக் கோரி தனியார் நிறுவனம் தொடுத்த வழக்கின் விசாரணையின் போது, மசூர் பருப்பை விட துவரம் பருப்பையே மக்கள் அதிகம் விரும்புவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.