குறுவைத் தொகுப்புத் திட்டம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது நியாயமல்ல என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்யும் வசதி கொண்டவை என்ற நிலையில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் உதவி வழங்கப்பட்டால், மீதமுள்ள ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களை வைத்திருக்கும் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.