தருமபுரி புறநகரில் சிப்காட் தொழில் பேட்டை அமைய உள்ள பகுதிகளை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த அவர், சிப்காட்டில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்படும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் நீரேற்றம் செய்யும் திட்டத்தை நிறைவேற்ற அரசு முனைப்புடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.