ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டை அருகே குடி போதையில் நண்பனை கட்டையால் தலையில் அடித்துக் கொன்றதாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
ராஜேந்திரன் என்ற அந்த முன்னாள் வீரர் தமது வீட்டில் ரகோத்தமன் என்ற நண்பருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
வேடிக்கையான பேச்சு திடீரென வாக்குவாதமாக மாறி கீழே கிடந்த கட்டையை எடுத்து ரகோத்தமனின் தலையில் ராஜேந்திரன் அடித்ததாக கூறப்படுகிறது.