பிரெஞ்ச் பாலினேஷியா பகுதியில் உள்ள தகித்தி தீவை ஒலிம்பிக் தீபம் சென்றடைந்துள்ளது.
பிரான்ஸ் ஆளுகைக்கு உட்பட்ட அப்பகுதியில் ஒலிம்பிக் அலைச் சறுக்கு விளையாட்டு நடைபெற உள்ளன.
படகில் கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இயற்கை எழில்சூழ்ந்த தீவில் வாழும் மக்கள் புடை சூழ ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெற்றது.