​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலத்தடி நீர் பல வண்ணங்களில் மாறியிருப்பதாக குற்றச்சாட்டு... மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை ஊர்மக்கள்

Published : Jun 14, 2024 1:46 PM

நிலத்தடி நீர் பல வண்ணங்களில் மாறியிருப்பதாக குற்றச்சாட்டு... மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை ஊர்மக்கள்

Jun 14, 2024 1:46 PM

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் உள்ள பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள் வெளியேற்றும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்து மஞ்சள், சிவப்பு மற்றும் கறுப்பு என பல வண்ணங்களில் வரும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர் சாய கழிவு நீராக மாறியதால், மாதத்திற்கு 3000 முதல் 4000 ரூபாய் வரை செலவு செய்து தண்ணீரை வாங்கி பயன்படுத்துவதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.