80 ஆண்டு அமெரிக்கா, சவுதி அரேபியா இடையிலான கச்சா எண்ணெய் ஒப்பந்தம் காலாவதி ஆனது
Published : Jun 14, 2024 8:21 AM
80 ஆண்டு அமெரிக்கா, சவுதி அரேபியா இடையிலான கச்சா எண்ணெய் ஒப்பந்தம் காலாவதி ஆனது
Jun 14, 2024 8:21 AM
டாலரில் மட்டுமே கச்சா எண்ணெய்யை விற்றுவந்த சவுதி அரேபிய அரசு, அமெரிக்கா உடனான ஒப்பந்தம் காலாவதி ஆனதால், இனி யூரோ, யுவான், யென், பிட்காயின் போன்றவற்றில் கச்சா எண்ணெய்யை விற்பது குறித்து பரிசீலித்துவருகிறது.
அடுத்த 80 ஆண்டுகளுக்கு டாலரில் மட்டுமே கச்சா எண்ணெய்யை விற்க வேண்டும் என 1974-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் கடந்த வாரம் காலாவதி ஆனது.
கச்சா எண்ணெய் விலை டாலரில் நிர்ணயம் செய்யப்பட்டதால் உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் கை ஓங்கி இருந்த நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது, அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.