​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கென்யாவில் மனைவிக்கு ஜாமீன் வழங்க மறுத்த பெண் நீதிபதியை துப்பாக்கியால் சுட்ட காவல் அதிகாரி

Published : Jun 14, 2024 7:55 AM

கென்யாவில் மனைவிக்கு ஜாமீன் வழங்க மறுத்த பெண் நீதிபதியை துப்பாக்கியால் சுட்ட காவல் அதிகாரி

Jun 14, 2024 7:55 AM

கென்யாவில், நீதிமன்றத்தில் வைத்து பெண் நீதிபதியை துப்பாக்கியால் சுட்ட சாம்சன் என்ற காவல் அதிகாரியை, சக காவலர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

பண மோசடி வழக்கில் கைதான தனது மனைவிக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி மோனிகாவை நோக்கி சாம்சன் சுட்டார்.

நீதிபதி காயம் அடைந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சாம்சன் கொல்லப்பட்டார். போலீசார் 3 பேர் காயம் அடைந்தனர்.