இந்தியாவில் வணிக ரீதியாக பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள திமிங்கல உமிழ்நீர் எனப்படும் ஆம்பர்கிரீஸை கடத்தி, திருச்சி மிளகு பாறையில் உள்ள ஒரு விடுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 19 கிலோ எடையுள்ள ஆம்பர்கிரீசும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.