சென்னை கலைவாணர் அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் 20 ஆட்டோ ஓட்டுனருக்கு ஆட்டோ மற்றும் 1000 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விழாவில் உதவிகளை வழங்கினர்.