சேலம் சுக்கம்பட்டியில் இருசக்கர வாகனங்கள் மீது மோதி 5 பேர் உயிரிழக்கக் காரணமான தனியார் பேருந்து ஓட்டுநர் ரமேஷின்ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பேருந்து இயக்கி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்,விபத்து ஏற்பட ஓட்டுனரின் அதிவேகம் தவிர்த்து வேகத்தடையும் ஒரு காரணமா என ஆய்வு செய்தனர் .
பின்னர் விபத்து இனி நடக்காமல் இருக்க சாலையை அகலப்படுத்த வேண்டுமா அல்லது வேறு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தனர்.
விபத்து நடந்த இடத்தில் தற்போது விபத்து ஏதும் ஏற்படாமல் இருக்கவும், வாகனங்கள் மெல்ல சென்று வரவும் வீராணம் போலீசார்
பேரிகாடுகளை வைத்துள்ளனர்.