திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் பள்ளியில் தமிழக அரசு கல்வி உரிமை மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகக் கூறி பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காவல் துறையினருக்கும் பெற்றோருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
செங்கம் வட்டாட்சியர் நடத்திய பேச்சு வார்த்தை முடிவில் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை குறைப்பதாக உறுதி அளித்த பின்னர் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.