நீட் தேர்வு குளறுபடிகளை நீதிமன்றத்தில் மேற்கோள்காட்டி அத்தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற முயற்சிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கலந்தாய்வு தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய பின் பேட்டியளித்த அவர், விருப்பப்படும் மாநிலங்கள் நீட் தேர்வை தொடர்ந்து நடத்தட்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்றும் கூறினார்.