கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் ஒரு குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் வரமுடியாது என்ற நிலை தான் வாரிசு அரசியல் என ராகுல் காந்திக்கு கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அரசு குடும்பத்தில் வாரிசுகளுக்கு இடம் கொடுத்துள்ளனர் என ராகுல் காந்தி விமர்சித்ததற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்து, மல்லிகார்ஜூன கார்கேவிடம் அதிகாரம் இருந்தால் அது வாரிசு அரசியல் இல்லை என்று வானதி தெரிவித்துள்ளார்.