ஒடிஷாவின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஒடிஷா பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் மஜி, 4 முறை ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா புதன்கிழமை மாலை 5 மணிக்கு புவனேஸ்வரின் ஜனதா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து புவனேஸ்வருக்கு சென்று மஜியின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.
பா.ஜ.க. தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் நவீன் பட்நாயக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.