மலாவி துணை அதிபர் சவுலோஸ் சிலிமா உள்பட 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் லிலாங்வியிலிருந்து முசூசூ நகருக்கு திங்களன்று புறப்பட்ட அந்த ராணுவ விமானம் திடீரென மாயமானதை அடுத்து தீவீரமாக தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முசூசூ நகருக்கு அருகே வனப்பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று மலாவி அதிபர் சக்வேரா தெரிவித்துள்ளார்.