கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 5 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கோட்டூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் ஹரிபிரசாந்த் கிராமத்தில் உள்ள கோயில் முன்பாக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் மீது மோதிய கார் நிற்காமல் சென்றுள்ளது.
மத்தூர் காவல்துறையினர் விரட்டிச் சென்று வெள்ளை குட்டை என்னும் பகுதியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை மடக்கி பிடித்து ஓட்டுனரை கைது செய்தனர்.