விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமான நிலையில், அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிப்பையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும், ஜூன் 14 முதல் 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 26ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.....