​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்த மர்ம நபர்

Published : Jun 10, 2024 12:23 PM

அமெரிக்க தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்த மர்ம நபர்

Jun 10, 2024 12:23 PM

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயங்கி வந்த அமெரிக்க தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை, அதிகாலை 3 மணிக்கு சுத்தியலால் அடித்து நொறுக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் காணப்படும் சிவப்பு வண்ண தலைகீழ் முக்கோண சின்னத்தை, தூதரகத்தின் பிரதான கதவில் அந்நபர் வரைந்துவிட்டு சென்றுள்ளார். இஸ்ரேல் உடன் நெடுங்காலமாக நட்பு பாராட்டிவரும் ஆஸ்திரேலியா, காஸா போர் விவகாராத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.