பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஸ்வீடனிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயங்கிவரும் ராயல் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் அங்குள்ள கட்டடம் ஒன்றுக்குள் புகுந்து உட்புறமாகத் தாளிட்டுக்கொண்டனர்.
போலீசார், போராட்டக்காரர்கள் மீது மோப்ப நாய்களை ஏவி விட்டு மிரட்டி, பல்கலைக்கழகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதே போல், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின்போது 2,000 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.