​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐந்தே நாட்களில் 584 கோடி ரூபாய் அதிகரித்த சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு..

Published : Jun 07, 2024 6:14 PM

ஐந்தே நாட்களில் 584 கோடி ரூபாய் அதிகரித்த சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு..

Jun 07, 2024 6:14 PM

ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வால், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஐந்தே நாட்களில் 584 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனத்தில் புவனேஸ்வரி வசம் 24 சதவீதம் என்ற அளவில் 2 கோடியே 26 லட்சம் பங்குகள் உள்ளதாக தெரிகிறது.

கடந்த 31 ஆம் தேதி 402 ரூபாயாக இருந்த ஹெரிடேஜ் புட்ஸ் பங்கு ஒன்றின் விலை, ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவின் எதிரொலியாக ஐந்தே நாட்களில் 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 661 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.