​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த சின்ன வெங்காயம்...

Published : Jun 06, 2024 11:28 AM

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த சின்ன வெங்காயம்...

Jun 06, 2024 11:28 AM

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகமாக இருந்ததால், கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனை ஆனது.

விதை வெங்காய விலையும் குறைந்ததால், விவசாயிகள் அதிக அளவில் வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.